| HOME | ADVERSITEMENT | PROGRAM LIST | SONG REQUEST | GUEST BOOK | CONTACT US |
வணக்கம் உறவே!
உங்களை இந்த பொழுதில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி யுன் மாதம் முதலாம் திகதியில் இருந்து கொட்பேட்-13 ஊடாக ஒலிக்கும் தமிழர்குரல் வானொலி பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என எண்ணுகின்றோம்.
எமது ஒலிபரப்புக்களை இப்போது ஐரோப்பா-மத்தியகிழக்கு-ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் செய்கோள் ஊடாகவும் இணையதளம் ஊடாக உலகம் முழுவதும் கேட்க முடிகின்றது.
உறவுகளே நீங்களும்!
உங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தை எமக்கு தந்துதவி எமது தேசியக்குரலான புலிகளின்குரலை தாயகம் நோக்கி எடுத்து செல்வதற்கு உதவுங்கள் என்று உங்களை நாம் உரிமையுடன் கேட்கிறோம் தமிழர்குரல் வானொலியில் விளம்பரம் செய்யும் போது உங்களுக்கு எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை.
ஏனெனில் ஐரோப்பா மற்றும் உலகப்பரப்பில் இயங்கும் மற்றய வானொலிகள் போல் சட்டபூர்வமாகபதிவு செய்யப்பட்டுதான் தமிழர்குரலும் இயங்குகின்றது.
இந்த நேரத்தில் ஏன் புலிகளின்குரல் வானொலி என்று வரமால் தமிழர்குரல் என்று வருகின்றோம்; என்ற குழப்பமான கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
கடந்த வருடம்-2009 மே 15ம் திகதியில் தாயகத்தில் தனது ஒலிபரப்புக்களை நிறுத்திய எமது புலிகளின்குரல், அதே வருடம் கரும்புலிகள் தினமான யூலை-5ம் திகதி இணையதளம் ஊடாக தனது அனைத்துலக ஒலிபரப்புக்களை மீண்டும் தொடங்கி இன்று வரை முழுவீச்சுடன் ஒலித்துக்கொண்டு உள்ளது.
இடம்பெயர்ந்து வந்து ஒரு ஆசியாவின் கரையில்அகதியாய் இருந்து இந்த ஒலிபரப்புக்களை நடத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு காரியம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எந்த இடர்வரினும் எமது தேசியக்குரல் ஒலிக்க வேண்டும் என்ற எமது தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்திற்கு அமைய இன்று வரை எமது வானொலி ஒலித்த வண்ணமுள்ளது.
கடந்த வருடம் நாம் உலகப்பரப்பில் உள்ள வர்த்தக நிறுவனங்களை தொடர்புகொண்டு "புலிகளின்குரல் வானொலிக்கு விளம்பரம் தாருங்கள்" என்றபோது, அவர்கள் அந்த விளம்பரங்களை தர தயங்கி நின்றார்கள்,அதற்கான காரணத்தை நாம் தேடியபோது எமது வானொலிக்கு விளம்பரம் தரும் பட்சத்தில் தாங்கள் சிறிலங்கா போகும்போது பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம் என அவர்கள் அச்சம் அடைந்திருந்தது தெரியவந்தது.
எனவே கடந்த செப்டெம்பர் மாதத்தில் இருந்து மே 26ம் திகதி வரை யுரோபேர்ட்-9 செய்கோள் ஊடாக ஒலித்து வந்த எமது ஒலிபரப்புகள், பல மத்தியகிழக்கு மற்றும் ஐரோப்பிய உறவுகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தற்போது கொட்பேட்-13 ஊடாக ஒலிக்கின்றன.
பல சுமைகளுக்கு மத்தியில் கொட்பேட்-13 ஊடாக ஒலிக்கும் எமது தமிழர்குரல் ஐரோப்பிய நேரம் 18 தொடக்கம் 21 வரை புலிகளின்குரல் ஒலிபரப்புக்களையும் ஒலிபரப்பி வருகின்றது ( புலிகளின்குரல் இணையதளத்தில் 24மணி நேரமும் ஒலித்தக்கொண்டுள்ளது)
இன்றைய நிலையில் துணிந்து செய்கோள் ஏறி வந்து எமது தேசியத்தை அனைத்துலகத்திற்கு ஒலிக்க வைக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது, அதே நேரம் இவைகளை ஒலிபரப்புவதற்கு எவ்வளவு சட்டசிக்கல்கள் உள்ளன என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாள் ஒலிபரப்பிலும்!
மணிச்செய்திகள்
மாவீரர் மகுடம்
தாயகப்பாடல்கள்
தாயகவலம்
பிரதான செய்திகள்
நாழிதழ்நாழி
பிசிறப்பு ஒலிபரப்புக்கள்
கருத்துக்களம்
ஆய்வுகள்
போன்றவற்றை செய்கோள் ஊடாக தற்போது நாம் எடுத்துவரும் நிகழ்சிகளில் சில.............
இவற்றை தொடர்ந்து ஒலிபரப்ப உங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
உறவுகளே நீங்களும் இணைந்து எமக்கென்று ஒரு வானொலியினை உலகம் முழுவதும் ஒலிக்க வைக்க உதவுவீர்கள் என்று நம்புகின்றோம்.
ஒரு நாளைக்கு உங்கள் நாட்டு பணம் 1 (பவுண்ஸ்,யூரோ,பிராங்,டொலர்) எமக்கு கிடைக்கும் வண்ணம் உங்களால் தரமுடிந்தால் எமது வானொலியினை திறம்பட ஒலிபரப்ப முடியும் என்பதையும் உரிமயுடன் அறியத்தருகின்றோம்.
அன்பாந்த மக்களே எம்மால் அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கு வந்து உங்களுடன் உரையாடி எம்மால் விளம்பரத்தினை பெற்றுக்கொள்ள முடியவில்லை, உங்களுக்கு தெரிந்த உறவினர் அல்லது நண்பர்கள் வர்த்தக நிறுவனம் வைத்திருப்பின் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் .
மீண்டும் சந்திக்கும் வரை!
நன்றியுடன்
விஒரி நிறுவனம்

